உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையின் நடுவில் மின்கம்பம் வாகன ஓட்டிகள் அவதி

சாலையின் நடுவில் மின்கம்பம் வாகன ஓட்டிகள் அவதி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் காலனியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் மட்டுமின்றி பள்ளி, பட்டு கூட்டுறவு சங்கம், அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.இப்பகுதியில் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு மின் இணைப்பு வழங்க சாலையோரத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றில், கைத்தறி நெசவாளர் பயிற்சி மையத்திற்கும், கைத்தறி கணினி வடிவமைப்பு நிலையம் அலுவலகத்திற்கும் இடையே உள்ள சாலையின் மையப் பகுதி யில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது.இதனால், இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. வேகமாக வரும் வாகனங்கள் சாலை வளைவில் திரும்பும்போது, மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை சாலையோரம் இடமாற்றம் செய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை