உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ராமர் உருவ வடிவில் அகல் விளக்கு பூஜை

ராமர் உருவ வடிவில் அகல் விளக்கு பூஜை

காஞ்சிபுரம்:அயோத்தி ராமர் பிராண பிரதிஷ்டை நேற்று முன்தினம் வெகுவிமரிசையாக நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி கும்பாபிஷேக நிகழ்வினை சிறப்பாக செய்து முடித்து, ராம பக்தர்கள் இடையே சிறப்புரை ஆற்றினார்.இந்த நிகழ்வினை முன்னிட்டு, நேற்று முன்தினம் வீடுகள் மற்றும் கோவில்கள் தோறும் அகல் விளக்குகள் ஏற்ற வேண்டும் என, ஹிந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.அதன்படி, வாலாஜாபாத் அடுத்த, அவளூர் காமாட்சி அம்பாள் சமேத சிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு ராமர் திரு உருவ வடிவில், பெண்கள் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.இந்த ராமர் உருவ அகல் விளக்கு சிலைக்கு, சிங்கேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார், ராமர் உருவ விளக்கிற்கு தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார்.இந்த நிகழ்ச்சியில், பா.ஜ., - ஒ.பி.சி., அணி மாவட்ட துணை தலைவர் பிரபாகரன்மற்றும் கோவில் அறங்காவலர் மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை