மேலும் செய்திகள்
மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்
02-Apr-2025
காஞ்சிபுரம்:ஊரக பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் சிறப்பாக செயல்படும் சுயஉதவிக் குழுக்கள் உள்ளிட்ட கூட்டமைப்புகளுக்கு ஆண்டுதோறும் மணிமேகலை விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றனஇந்த விருதுகளுக்கு நிதி ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. 2024- - 25ம் ஆண்டுக்கான மணிமேகலை விருதுக்கு தகுதியான சமுதாய அமைப்புகளிடமிருந்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் விண்ணப்பங்கள், ஏப்ரல் 15 - 30 வரை, வட்டார இயக்க மேலாண்மை அலகு அலுவலகம் வாயிலாக பெறலாம்.மே 1ம் தேதிக்குள் மகளிர் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
02-Apr-2025