உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / முதலியார்குப்பம் படகு குழாமிற்கு அதிவேக மோட்டார் படகு வருகை

முதலியார்குப்பம் படகு குழாமிற்கு அதிவேக மோட்டார் படகு வருகை

செய்யூர் : செய்யூர் அருகே முதலியார்குப்பம் கிராமத்தில், தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும், 'ரெயின் ட்ராப் போட் - ஹவுஸ்' உள்ளது.இங்கு, விடுமுறை நாட்களில், ஏராளமான சுற்றுலா பயணியர் வருகை தந்து, தங்களின் விருப்பத்திற்கேற்ப படகுகளில் சவாரி செய்து, கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள ஓய்வு கூடாரங்களில் அமர்ந்து பொழுதுபோக்குவது வழக்கம்.இங்கு, எட்டு மற்றும் ஆறு இருக்கைகள் கொண்ட விசைப்படகுகள், மூன்று இருக்கைகள் கொண்ட அதிவேக விசைப்படகுகள், இரண்டு இருக்கைகள் கொண்ட துடுப்பு படகுகள் என, பல வகையான படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.குடும்பத்தினருடன் வருவோர், எட்டு அல்லது ஆறு இருக்கைகள் கொண்ட விசைப்படகில் சவாரி செய்து மகிழ்கின்றனர். குழந்தைகள் மற்றும் இளைஞர்கள், அதிவேக விசைப்படகுகளில் விருப்பம் காட்டுகின்றனர்.இந்நிலையில், தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் வாயிலாக, 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 1,498 சி.சி., திறன் கொண்ட புதிய அதிவேக விசைப்படகு வாங்கப்பட்டு உள்ளன.இப்படகு, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, சுற்றுலா துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை