உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பிளாஸ்டிக் ஒழிப்பு மாணவர்களிடம் விழிப்புணர்வு

பிளாஸ்டிக் ஒழிப்பு மாணவர்களிடம் விழிப்புணர்வு

காஞ்சிபுரம்:விதைகள் தன்னார்வ அமைப்பினர், காஞ்சிபுரம்மாவட்டம் முழுதும் அரசு பள்ளிகளில், மாணவ- - மாணவியரிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.அதன்படி, வாலாஜாபாத் ஆர்.சி.எம்., உயர்நிலைப் பள்ளியில், விதைகள் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் பசுமை சரண் தலைமையில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இதில், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்தும் பாடல், கலை நிகழ்ச்சி வாயிலாகவும், ஒரு முறை பயன்படுத்திய பின் துாக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில், டம்ளர்களை கழுத்தில் மாலையாக அணிந்து நுாதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அதைத் தொடர்ந்து, மாணவ- - மாணவியருக்கு மஞ்சப்பை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை