மேலும் செய்திகள்
கண்ணன்தாங்கல் சக்தி பீடத்தில் முப்பெரும் விழா
54 minutes ago
காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் நகரை ஒட்டி செல்லும் வேகவதி ஆற்றில், ஆயிரக்கணக்கான ஆக்கிரமிப்புகள் இன்னும் அகற்றப்படாமலேயே உள்ளன. ஏற்கனவே ஆற்றின் பல்வேறு பகுதிகள் மாசடைந்த நிலையில், குப்பை கழிவுகள் கொண்ட மூட்டைகள், ஆற்றின் பல்வேறு பகுதிகளில் கொட்டப்பட்டு வருகிறது.காஞ்சிபுரம் தாயார்குளம் அருகே செல்லும் வேகவதி ஆற்றில், குப்பை கழிவுகள் கொண்ட பல மூட்டைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டு வருகின்றன.வேகவதி ஆற்றை பராமரிக்க வேண்டிய நீர்வள ஆதாரத் துறையினர், ஆற்றை பராமரிப்பதில் அலட்சியம் காட்டி வருகின்றனர்.இதேபோல, ஓரிக்கை பகுதியில், வேகவதி ஆறு குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.தேனம்பாக்கம் பகுதியிலும் ஆற்றின் இருபுறங்களிலும் கழிவு நீர் திறந்து விடப்படுகிறது.இதுபோல, வேகவதி ஆற்றின் பல்வேறு இடங்கள் நாசமாகி வரும் நிலையில், நீர்வள ஆதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காஞ்சிபுரம் நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
54 minutes ago