உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தொழில் பழகுனர் முகாம்: பங்கேற்க அழைப்பு

தொழில் பழகுனர் முகாம்: பங்கேற்க அழைப்பு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், பிப்., 21ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரையில், தொழிற்பழகுனருக்கு நேரடி பயிற்சி சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இதில், சென்னை மண்டலத்தில் அரசு பொதுத்துறை மற்றும் தனியார் துறையின் முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. என்.சி.வி.டி மற்றும் எஸ்.சி.வி.டி., முறையில் படித்த ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றவர்கள் திறன் பயிற்சி மையங்களில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள்.எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டயம் மற்றும் பட்டம் படித்தவர்கள் நேரடியாக தொழிற்பழகுனர் பயிற்சி முகாமில் பங்கேற்கலாம்.ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை தொழிற்பழகுனர் பயிற்சி பெற்று, தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் பெற்று பயன்பெறலாம். இந்த பயிற்சிக்கு, 8,000 ரூபாய் முதல் 16,000 ரூபாய் வரையில் உதவித்தொகை பெறலாம். எனவே, தொழில் பழகுனர் பயிற்சி முகாமில் அசல் கல்வி சான்றிதழ் மற்றும் நகல்களுடன் பங்கு பெறலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை