| ADDED : பிப் 15, 2024 10:36 PM
உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி கண்டிகை பகுதியில், ஜூப்ளி சி.பி.எஸ்.சி., அகடாமி தனியார் பள்ளி இயங்குகிறது.இப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயில்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனுார் பகுதியைச் சேர்ந்த பாதர் சகாயராஜ், 52, என்பவர் இப்பள்ளியில் தாளாளராக உள்ளார்.இந்நிலையில், அப்பள்ளியில் மானாம்பதி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு பயிலும் 7 வயது மாணவருக்கு, சகாயராஜ், பாலியல் தொந்தரவு தந்துள்ளார்.பள்ளி சிறுவனின் செயலில் மாற்றம் கண்ட பெற்றோர், இதுகுறித்து சிறுவனிடம் விசாரித்துள்ளனர்.அப்போது, தாளாளர் சகாயராஜ் தன்னிடம்பாலியல் சீண்டல்கள் செய்து துன்புறுத்தி வருவதாக மாணவர் தெரிவித்துள்ளார்.இதைத் தொடர்ந்து மாணவரின் பெற்றோர் சைல்ட் லைப் லைன் மூலம் புகார் தெரிவித்துள்ளனர். அதன்படி, விசாரணை மேற்கொண்ட பெருநகர் போலீசார், பள்ளி தாளாளர் சகாயராஜை, 'போச்சோ' சட்டத்தில் கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.