உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  வாக்காளர் விபரம் பதிவேற்றும் பணி 100 சதவீதம் முடித்த ஆசிரியை பரிசு வழங்கி கலெக்டர் கலைச்செல்வி பாராட்டு

 வாக்காளர் விபரம் பதிவேற்றும் பணி 100 சதவீதம் முடித்த ஆசிரியை பரிசு வழங்கி கலெக்டர் கலைச்செல்வி பாராட்டு

காஞ்சிபுரம்: வாக்காளர்களின் விபரங்களை 100 சதவீதம், தேர்தல் கமிஷனின் மொபைல் ஆப்பில் முதலில் பதிவேற்றி பணியை முடித்த, ஓட்டுச்சாவடி நிலை அலுவலருக்கு பரிசு, சான்றிதழை வழங்கி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று பாராட்டினார். வாக்காளர் தீவிர திருத்தம் பணிக்காக வாக்காளர் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், புகைப்படம் அச்சடிக்கப்பட்ட வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை சம்பந்தப்பட்ட ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று, கடந்த 4ம் தேதி முதல் வழங்கி வருகின்றனர். இப்பணிக்காக காஞ்சி புரம் மாவட்டத்தில், 1,401 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுகளில் கணக்கெடுப்பு படிவம் வழங்கி, அவற்றை பூர்த்தி செய்து திரும்ப பெற்று வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் உள்ள, 14.22 லட்சம் வாக்காளர்களில், 59,000 வாக்காளர்களுக்கு இன்னமும் கணக்கெடுப்பு படிவம் சென்றடையாமல் உள்ளது. அதேசமயம், பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை திரும்ப பெற்று, அவற்றை தேர்தல் கமிஷனின் மொபைல் ஆப்பில், பதிவேற்றும் பணி நடக்கின்றன. இதற்காக, ஓட்டுச் சாவடி நிலை முகவர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மாவட்டத்தில், இது வரை 30 சதவீத விண்ணப்பங்களின் விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துள்ள நிலையில், உத்திரமேரூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, ஓட்டுச்சாவடி நிலை அலுவலரான, இடைநிலை ஆசிரியை அம்பிகா என்பவர், தன் பகுதிக்கான வாக்காளர்களின் விபரங்களை 100 சதவீதம் மொபைல் ஆப்பில் பதிவேற்றம் செய்து பணியை முடித்துள்ளார். ஆசிரியை அம்பிகாவை பாராட்டி, பொன்னாடை போர்த்தி, சான்றிதழ், நினைவு பரிசுகளை வழங்கி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று கவுரவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ