மேலும் செய்திகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் பெருங்கோழியில் விபத்து அபாயம்
13 hour(s) ago
விவசாயிகள் தின விழா
13 hour(s) ago
களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு
13 hour(s) ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சியுடன், சுற்றியுள்ள கிராமங்கள் இணைய உள்ளதால், முன்கூட்டியே 6 கிராமங்களில், தலா 5 டன் கொள்ளளவு கொண்ட குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்க உள்ளனர்.காஞ்சிபுரம் மாநகராட்சியின் நான்கு மண்டலங்களில், 51 வார்டுகளில், 1,000த்துக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்குள்ள வீடுகளில், அன்றாடம் 50 டன்னுக்கும் அதிகமான குப்பை கழிவுகள் சேகரமாகின்றன.இவற்றை, நத்தப்பேட்டையில் உள்ள குப்பை கிடங்கில் வைத்து, தரம் பிரித்து, மட்கும் குப்பையை தனியாகவும், மட்காத குப்பையை தனியாகவும் அகற்றுகின்றனர்.இதில், மட்கும் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் பணிகளை, ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மாநகராட்சியில் வெள்ளைக்குளம், செவிலிமேடு, ஆனந்தாபேட்டை உள்ளிட்ட 13 இடங்களில், 46 மெட்ரிக் டன் எடை கொண்ட உரம் தயாரிக்கும் மையங்கள் செயல்படுகின்றன. உரம் தயாரிப்பு மையம்
இந்நிலையில், காஞ்சிபுரம் அருகேயுள்ள ஊராட்சிகளில், குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதி மூலம், இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். இதற்கான டெண்டர் பணிகளும் நடைபெறுவதால், விரைவில் உரம் தயாரிக்கும் மையங்கள் அமையவுள்ளன. காஞ்சிபுரம் அருகேயுள்ள அஞ்சூர், வையாவூர், சிறுகாவேரிப்பாக்கம், ஏனாத்துார், முத்தியால்பேட்டை, புத்தேரி ஆகிய ஆறு ஊராட்சிகளில், தலா 57 லட்சம் ரூபாயில், உரம் தயாரிக்கும் மையங்கள் செயல்படுத்த உள்ளனர். இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மாநகராட்சியில் சேகரமாகும் குப்பையை அரைத்து, உரம் தயாரிக்கும் தொட்டிகளில் கொட்டப்படுகிறது. அதில், மண்புழு விடப்பட்டு சில நாட்களுக்கு பின், குப்பை முழுதும் மக்கி உரமாக மாறும். இந்த முறையிலேயே உரம் தயாரிக்கப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:மாநகராட்சியை சுற்றியுள்ள ஆறு ஊராட்சிகளில், குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அங்கு இடம் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி, இடம் பார்க்கப்பட்டு வருகிறது. 30 டன் உரம்
மாநகராட்சியுடன், முத்தியால்பேட்டை, ஏனாத்துார் உள்ளிட்ட ஊராட்சிகள் எதிர்காலத்தில் இணைய உள்ளன. இதனால், முன்கூட்டியே இந்த ஊராட்சிகளில், உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.விவசாயிகள், நகரவாசிகள் என, யார் கேட்டாலும் இந்த உரத்தை வழங்குகிறோம். புதிதாக அமைய உள்ள உரம் தயாரிக்கும் மையத்திலிருந்து, தலா 5 மெட்ரிக் டன் உற்பத்தி செய்ய உள்ளதால், 30 டன் உரம் கிடைக்கும்.மாநகராட்சியுடன் சுற்றியுள்ள 21 கிராமங்கள் இணைவதற்கான கருத்துருக்கள் ஏற்கனவே அரசுக்கு சென்றுள்ளன. எதிர்காலத்தில் இந்த கிராமங்களில் இணையும் என்பதால், முன்கூட்டியே குப்பை, குடிநீர், பாதாள சாக்கடை திட்டங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது, குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் மையம் அமைக்க உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
கிராமங்கள் - ஒதுக்கீடு-லட்சத்தில் கொள்ளளவு-மெட்ரிக் டன்அஞ்சூர் 57.5 5வையாவூர் 57.5 5முத்தியால்பேட்டை 57.5 5சிறுகாவேரிப்பாக்கம் 57.5 5ஏனாத்துார் - 57.5 5புத்தேரி - 57.5 5
காஞ்சிபுரம் மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம், ஆளுங்கட்சியினரால் இயக்கப்படுகிறது என, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான சூழலில், பல்வேறு இடங்களில் குப்பை அகற்றும் பணிகள் சரிவர நடப்பதில்லை என, நகரவாசிகள் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர். குப்பை அகற்றும் பணிக்கு பயன்படுத்தும் வாகனங்கள், நிதி ஒதுக்கீடு என, பல்வேறு தகவல்களை எதிர்க்கட்சியினர் கேட்டபோது, மாநகராட்சி நிர்வாகம் தரவில்லை என்கின்றனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago