மேலும் செய்திகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் பெருங்கோழியில் விபத்து அபாயம்
18 hour(s) ago
விவசாயிகள் தின விழா
18 hour(s) ago
களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு
18 hour(s) ago
சென்னை:ஜி.எஸ்.டி., - வாலாஜாபாத் சாலைகளை இணைக்கும், முக்கிய சாலையாக, தாம்பரம் - முடிச்சூர் சாலை விளங்குகிறது. 24 மணி நேரமும் போக்குவரத்து உடைய இச்சாலையில், முடிச்சூர், மதனபுரம், பார்வதி நகர், பெருங்களத்துார் பகுதிகளில் பள்ளம் தோண்டி, சி.என்.ஜி., எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.இப்பணிக்காக, சாலையில் பள்ளம் தோண்டி குழாய் பதிக்கப்பட்ட பின், பள்ளத்தை முறையாக மூடுவதில்லை. மேடும், பள்ளமாக அரைகுறைவாக விட்டு விடுகின்றனர். இரும்பு தடுப்புகளையும் முறையாக வைப்பதில்லை.இதனால், பணி முடிந்த இடங்களில், ஒரு வழிப்பாதையாக மாறி, தினமும் 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். மேடும், பள்ளமாக காணப்படுவதால், தடுமாறி விழுந்து, விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில், அதிக விபத்து ஏற்படுகிறது.பணி முடிந்த இடங்களில், தார் ஊற்றி சீரமைக்கும் பணியை மேற்கொண்டால், விபத்தையும், நெரிசலையும் தடுக்கலாம்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குழாய் பதிக்கும் பணி முடிந்த இடங்களில், உடனுக்குடன் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago