உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  சாலையை சீரமைக்க வலியுறுத்தி கவுன்சிலர், வார்டு மக்கள் மறியல்

 சாலையை சீரமைக்க வலியுறுத்தி கவுன்சிலர், வார்டு மக்கள் மறியல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளைக்குளம் பகுதியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, கவுன்சிலர், வார்டு மக்கள் மறியல் போராட்டம் நேற்று நடத்தினர். காஞ்சிபுரம் மாநகராட்சி வெள்ளைக்குளம் பகுதியில் வடிகால் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு பணிகளின் தேவைகளுக்காக சாலை தோண்டப்பட்டது. சாலையை சீரமைக்காமல் மெத்தனத்துடன் செயல்படும், காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, அப்பகுதி கவுன் சிலர் சரஸ்வதி, குடியிருப்பு வாசிகளுடன் இணைந்து குஜராத்தி சத்திரத்திலிருந்து வெள்ளைக்குளம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டார். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. சாலை மறியல் குறித்து தகவலறிந்த, சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான போலீசார் சமாதான பேச்சு நடத்தியும் உடன்பாடின்றி போராட்டத்தை தொடர்ந்தனர். தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி உதவிப் பொறியாளர் சிவானந்தம், நேரில் வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ