உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கிரிப்டோ கரன்சி முதலீடு மோசடி டிராபிக் போலீஸ்காரர் கைது

கிரிப்டோ கரன்சி முதலீடு மோசடி டிராபிக் போலீஸ்காரர் கைது

காஞ்சிபுரம், ' திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகாவிற்கு உட்பட்ட அப்துல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன்; தனியார் லோன் ஏஜன்சியில் பணியாற்றி வருகிறார்.இவரும், திருவண்ணாமலை மாவட்டம், திருவடிராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவரும், ஸ்ரீபெரும்புதுாரில் போக்குவரத்து போலீசில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வரும் மனோகரன், 32, என்பவரும் நண்பர்கள்.'கிரிப்டோ கரன்சி'யில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 18,000 ரூபாய் வட்டி தருவதாக, விஸ்வநாதனிடம் மனோகரன் தெரிவித்துள்ளார்.இதை நம்பி, கடந்த ௨௦௨௨ல், மனோகரன், அவரது தந்தை மதியழகன், மனைவி கிரிஜா உள்ளிட்டோரின் வங்கி கணக்குகளுக்கும், நேரடியாகவும், 66 லட்ச ரூபாயை விஸ்வநாதன் வழங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து விஸ்வநாதனுக்கு, வட்டியாக 20 லட்ச ரூபாயை, மனோகரன் தரப்பு கொடுத்ததாக தெரிகிறது.ஆனால், தொடர்ந்து வட்டி அளிக்காததால், வட்டியுடன் சேர்த்து அசலை விஸ்வநாதன் கேட்டு வந்துள்ளார்.பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதால், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் விஸ்வநாதன் புகார் அளித்து இருந்தார்.இதை விசாரித்த போலீசார், போக்குவரத்து போலீஸ்காரர் மனோகரன், ௩௨, அவரது தந்தை மதியழகன், மனைவி கிரிஜா ஆகியோர் மீது, இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.முதற்கட்டமாக, போக்குவரத்து போலீஸ் மனோகரனை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இரு நாட்களுக்கு முன் கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை