உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நீர்த்தேக்க தொட்டி துாண்கள் சேதம் 

நீர்த்தேக்க தொட்டி துாண்கள் சேதம் 

ஏனாத்துார் : காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் உயர்நிலைப் பள்ளி வளாகம் அருகே, 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.இந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, முக்கிய தெருக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நீர்த்தேக்க தொட்டியின் அடிபாகத்தில் இருக்கும் துாண்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.குறிப்பாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நடுவில் இருக்கும் துாணில், சிமென்ட் காரை பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. இதுதவிர, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் படிக்கட்டுகள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.இதனால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம்செய்து, குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, சேதம் அடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு பதிலாக புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டிக் கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை