உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  வாலாஜாபாதில் தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

 வாலாஜாபாதில் தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

வாலாஜாபாத்: நுாறு நாள் வேலை உறுதி திட்டத்திற்கு, மஹாத்மா காந்தி பெயரை நீடிக்க கோரி, வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில், தி.மு.க., சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் வாலாஜாபாத் ஒன்றிய செயலர் சேகர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலரும், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான சுந்தர் பங்கேற்று கண்டன உரையாற்றினார். கிராமப்புறங்களில் நுாறு நாள் வேலை திட்டத்தில் மஹாத்மா காந்தி பெயரை நீக்கி மாற்று பெயர் வைப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதேபோன்று, உத்திர மேரூர் பேருந்து நிலையத்தில் உத்திரமேரூர் தி.மு.க., ஒன்றிய செயலர் ஞானசேகரன் மற்றும் சாலவாக்கம் தி.மு.க., ஒன்றிய செயலர் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க., கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., - கம்யூ., கட்சிகள், - வி.சி., - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்று பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி