உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இ - சேவை மையத்தில் எல்.எல்.ஆர்., பெறலாம்

இ - சேவை மையத்தில் எல்.எல்.ஆர்., பெறலாம்

காஞ்சிபுரம்,:'ஆன்லைன்' சேவையை மேம்படுத்தவும், அரசின் திட்டங்களை மக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே கொண்டு சேர்க்க, எல்.எல்.ஆர்., எனப்படும் ஓட்டுனர் பழகுனர் உரிமத்தை, இ- - சேவை மையங்களில் பெறலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுதும் உள்ள 55,000 இ- - சேவை மையங்களில், ஓட்டுனர் பழகுனர் உரிமம் விண்ணப்பிக்கும் முறை, கடந்த 13ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.இ- -சேவை மையங்களில், ஓட்டுனர் பழகுனர் உரிமம் கட்டணத்துடன், இ - -சேவை கட்டணமாக, 60 ரூபாய் கூடுதலாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை