உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  சாலை விபத்தில் மூதாட்டி பலி

 சாலை விபத்தில் மூதாட்டி பலி

காஞ்சிபுரம்: ஏனாத்துார் சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மூதாட்டி இறந்தார். காஞ்சிபுரம், கோனேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி, 65. இவர், விவசாய கூலி வேலை செய்து வந்தார். நேற்று அதிகாலை 4:30 மணியளவில், விவசாய நிலத்திற்கு செல்ல ஏனாத்துார் - காஞ்சிபுரம் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம், செல்வி மீது மோதியுள்ளது. இதில், படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து காஞ்சி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை