| ADDED : நவ 18, 2025 04:19 AM
காஞ்சிபுரம்: உத்திரமே ரூர் அருகே 26 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, நகை மற்றும் பணம் மீட்கப்படவில்லை என, கலெக்டர் அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட கமலக்கண்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார். புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: உத்திரமேரூர் தாலுகாவிற்குட்பட்ட, குண்ணவாக்கம் போஸ்ட், பாண்டவாக்கம் கிராமத்தில், நான் , என் மனைவி, மகனுடன் வசித்து வருகிறேன். அக்டோபர் 3ம் தே தி நானும், என் மனைவியும் வீட்டை பூட்டி விட்டு வாசலில் துாங்கினோம். மகன் வெங்கடபெருமாள் அன்றிரவு, இரவு பணிக்காக சென்று விட்டார். அன்றிரவு வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், 26 சவரன் நகை மற்றும் 2 லட் சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுவரை நகை மற்றும் பணத்தை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. நான் ஏற்கனவே எஸ்.பி.,அலுவலகத்தில் இரு முறை புகார் அளித்துள்ளேன். நகை கொள்ளையடித்து, 45 நாட்கள் கடந்தும், எங்களது நகையை மீட்டு தரவில்லை. நான் விவசாய கூலி வேலை செய்கிறேன். நகையை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.