உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கருப்பு கொடி ஏற்ற விவசாயிகள் தீர்மானம்

கருப்பு கொடி ஏற்ற விவசாயிகள் தீர்மானம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, செட்டியார்பேட்டையில், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பரந்துார் வட்டார விவசாயிகள் ஆலோசனை கூட்டம், விவசாயி குணசேகரன் தலைமையில் நேற்று நடந்தது.தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், சங்க மாவட்ட செயலர் நேரு, மாவட்ட தலைவர் சாரங்கன் ஆகியோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், பரந்துார் பசுமை விமான நிலையம் அமைக்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்ய, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மச்சேந்திரநாதன் அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும், விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்துவதை கண்டித்து, அக்.13ல், வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை