உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடுப்புகளின்றி தரைப்பாலம் கணபதிபுரத்தில் அச்சம்

தடுப்புகளின்றி தரைப்பாலம் கணபதிபுரத்தில் அச்சம்

நெமிலி,காஞ்சிபுரம் அடுத்த, கணபதிபுரம் கிராமத்தில் இருந்து, முருங்கை கிராமத்திற்கு செல்லும், பிரதான சாலை உள்ளது. இச்சாலை வழியாக, தக்கோலம், முருங்கை ஆகிய பகுதியைச் சேர்ந்த மக்கள், கணபதிபுரம், பள்ளூர் ஆகிய கிராமங்களின் வழியாக காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய பகுதிக்கு செல்கின்றனர்.இந்த சாலை குறுக்கே, விருதசீர நதி இரண்டாக பிரிந்து செல்கிறது. இந்த நதி குறுக்கே உயர்மட்ட தரைப்பாலம் செல்கிறது. இங்கு, சமீபத்தில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இந்த உயர்மட்ட தரைப்பாலத்தில் இருபுறமும் தடுப்பு அமைக்கவில்லை. மேலும், சாலை ஓரம் மின்விளக்கு வசதி இல்லை.இதனால், இரவு நேரங்களில் சைக்கிள், இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் கவிழும் நிலை உள்ளது.எனவே, கணபதிபுரம்- முருங்கை கிராமம் இடையே, உயர்மட்ட தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ