உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோயம்பேடு சந்தையில் தீ விபத்து

கோயம்பேடு சந்தையில் தீ விபத்து

கோயம்பேடு : நெற்குன்றம் செல்லி அம்மன் நகரை சேர்ந்தவர், கமல் கான் மாலிக், 35. இவர் கோயம்பேடு காய்கறி சந்தையில், வாடகைக்கு கடை எடுத்து வியாபாரம் செய்து வருகிறார்.இந்நிலையில், நேற்று மாலை அவரது கடை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், கடையின் உள்ளே துாங்கி கொண்டிருந்த வட மாநில தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறி உயிர் தப்பினர்.தகவல் அறிந்து ஜெ.ஜெ., நகர் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், கடை முழுதும் தீ பரவியது. தீயை அணைத்து, தீயணைப்பு வீரர்கள் நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கோயம்பேடு போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை