உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆட்டோ ஓட்டுனர் கொலை வழக்கில் தி.மு.க., கவுன்சிலர் உட்பட ஐவர் கைது

ஆட்டோ ஓட்டுனர் கொலை வழக்கில் தி.மு.க., கவுன்சிலர் உட்பட ஐவர் கைது

மதுராந்தகம் : செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் அடுத்த கொளப்பாக்கத்தைச் சேர்ந்தவர் குமார், 44; ஆட்டோ ஓட்டுனர்.இவர், படாளம் அடுத்த, புக்கத்துறை பகுதியில், டிச., 21ல் தலை மற்றும் உடலில் கத்தியால் வெட்டப்பட்டு இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து, இக்கொலையில் தொடர்புடைய குமாரின் நண்பரும், தாம்பரம் மாநகராட்சி, 45வது வார்டு தி.மு.க., கவுன்சிலருமான தாமோதரன், 49, என்பவரை, நேற்று கைது செய்தனர்.அவருக்கு உடந்தையாக இருந்த சேலையூர் செந்தில்குமார், 47, கார்த்தி, 36, ராம்குமார், 32, மற்றும் பிரவீன், 33, ஆகியோரையும், போலீசார் கைது செய்தனர்.இக்கொலை குறித்து போலீசார் கூறியதாவது:கவுன்சிலர் தாமோதரனும், கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுனர் குமாரும் நண்பர்கள். தாமோதரன் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும்போது, அவரின் மனைவி வேல்விழியுடன் குமாருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவரிடமிருந்து பணம் மற்றும் நகை உள்ளிட்டவற்றை வாங்கி, குமார் பயன்படுத்தி வந்துள்ளார்.சில மாதங்களுக்கு முன், வேல்விழி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, வேல்விழி கொடுத்த பணம் மற்றும் நகைகளை, குமாரிடம் தாமோதரன் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டு, பகை மூண்டுள்ளது.சம்பவ நாளன்று, தாமோதரன், அவரது நண்பர்கள் கார்த்தி, செந்தில், ராம்குமார், பிரவீன் ஆகியோரை வரவழைத்து பேசியுள்ளார். பின், குமாரை வரவழைத்து, அனைவரும் மது அருந்தியுள்ளனர்.பின், பணம், நகைகளை திருப்பித் தராத ஆத்திரத்தில், தாமோதரன் மற்றும் கூட்டாளிகள், சுத்தியல் மற்றும் கூர்மையான கருங்கற்களால், குமாரின் தலை மற்றும் உடல் பாகங்களில் தாக்கி கொன்றுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை