உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பள்ளிகளுக்கான கால்பந்து: இந்துஸ்தான் அணி வெற்றி

பள்ளிகளுக்கான கால்பந்து: இந்துஸ்தான் அணி வெற்றி

சென்னை, : பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில், படூர் இந்துஸ்தான் சர்வதேச பள்ளி, 8 - 0 என்ற கணக்கில், ஹார்ட்புல்னஸ் பள்ளியை தோற்கடித்தது.சென்னையின் எப்.சி., - இங்கிலாந்து நார்விச் சிட்டி எப்.சி., கிளப் இணைந்து, பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியை, சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளி மைதானத்தில் நடத்துகின்றன. யு - 12, யு - 14 பிரிவினர் மட்டும் விளையாடுகின்றனர்.'லீக்' மற்றும் 'நாக் - அவுட்' முறையில் நடக்கும் இப்போட்டியில், இருபிரிவிலும் தலா 32 அணிகள் என, மொத்தம் 64 அணிகள் பங்கேற்றுள்ளன. பிப்., மூன்றாம் வாரம் வரை போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.நேற்று நடந்த போட்டிகளில் மூன்று அணிகள் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்து.

12 வயதுக்குட்பட்ட பிரிவு

அணிகள் புள்ளிகள்படூர் இந்துஸ்தான் 8ஹார்ட்புல்ன்ஸ் 0-சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி 4திருவேற்காடு மகரிஷி எக்சலன்ஸ் 0-14 வயதுக்குட்பட்ட பிரிவுபடூர் இந்துஸ்தான் சர்வதேச பள்ளி 0திருவேற்காடு மகரிஷி எக்சலன்ஸ் 0-தாழம்பூர் வேல்ஸ் வித்யாஷ்ரம் பள்ளி 4சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி 0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை