உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருமுடிவாக்கம் கால்வாயில் கொட்டப்படும் குப்பை கழிவுகள்

திருமுடிவாக்கம் கால்வாயில் கொட்டப்படும் குப்பை கழிவுகள்

குன்றத்துார்:குன்றத்துார் ஒன்றியம், திருமுடிவாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளது சிட்கோ தொழிற்பேட்டை. திருமுடிவாக்கம் ஊராட்சியில் குடியிருப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது, 20,000த்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இந்நிலையில், இந்த ஊராட்சியில் குப்பை முறையாக அகற்றப்படுவதில்லை. குடியிருப்பு பகுதியில் பல இடங்களில் குப்பை உள்ளன.செம்பரம்பாக்கம் ஏரியின் ஒன்றாம் மதகில் இருந்து வெளியேறும் கால்வாய் நீர், திருமுடிவாக்கம் வழியே அடையாறு கால்வாய்க்கு செல்கிறது. இந்த கால்வாயில் ஊராட்சியில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டி மாசு ஏற்படுத்தி வருகின்றனர். கால்வாயில் உள்ள குப்பையை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை