உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கால்நடைகள் கொட்டகையான அரசு துவக்கப்பள்ளி திண்ணை

கால்நடைகள் கொட்டகையான அரசு துவக்கப்பள்ளி திண்ணை

வாலாஜாபாத்: திருவங்கரணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் திண்ணையில், இரவு நேரங்களில் கால்நடைகள் தஞ்சமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருவங்கரணை கிராமத்தில் கால்நடை வளர்ப்பு பிரதானமாக இருந்து வருகிறது. மேய்ச்சலுக்கு செல்லும் தங்களது பசு, எருது மற்றும் எருமை மாடுகளை இரவு நேரங்களில் முறையாக கொட் டகையில் கட்டி பராமரிக்காமல் விட்டு விடுவதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். அக்கால்நடைகள் சாலை மற்றும் தெருக்களில் உலா வருவதுடன் தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி, ரேஷன் கடை, சேவை மையம் போன்ற பொது கட்டட பகுதிகளை இரவு நேரங்களில் இருப்பிடமாக கொண்டுள்ளன. குறிப்பாக அப்பகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி திண்ணை, இரவு நேரங்களில் மாடுகள் தங்குமிடமாக உள்ளது. இதனால், அத்திண்ணை முழுக்க மாட்டு சாணம் குவிந்து, காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. எனவே, திருவங்கரணை கிராமத்தில் தொடக்கப் பள்ளி அசுத்தமாவதை தடுக்க, பள்ளி நுழைவாயிலில் கேட் வசதி ஏற்படுத்துவதுடன், அப்பகுதியினர் கால்நடைகளை கொட்டகையில் கட்டி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை