உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஊர்க்காவல் படைக்கு வரும் 29ல் ஆட்சேர்ப்பு

ஊர்க்காவல் படைக்கு வரும் 29ல் ஆட்சேர்ப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பில், ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள, ஆறு பெண்கள் உட்பட 34 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு தேர்வு, நாளை மறுநாள் நடைபெற உள்ளதாக, எஸ்.பி., அலுவலகம் தெரிவித்துள்ளது.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 20 - 45 வயதுக்குட்பட்டோர், குற்ற பின்னணி இல்லாதோர், இந்த ஆட்சேர்ப்பு தேர்வில்பங்கேற்கலாம்.காஞ்சிபுரம் மாவட்ட காவல் பயிற்சி பள்ளி மைதானத்தில், நாளை மறுநாள் காலை 9:00 மணி முதல், பிற்பகல் 1:00 மணி வரை நடைபெற உள்ளது. விருப்பமுள்ள நபர்கள், கல்வி சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம் என, எஸ்.பி., அலுவலகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ