உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கொல்லச்சேரியில் ஏரியின் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு மாயமாகும் அவலம்

கொல்லச்சேரியில் ஏரியின் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு மாயமாகும் அவலம்

குன்றத்துார்:சென்னை, குன்றத்துார் அருகே செம்பரம்பாக்கம் ஏரியின் கரை பகுதி அமைந்துள்ளது. இந்த கரையில், எட்டு இடங்களில் விவசாய நிலத்திற்கு தண்ணீர் வெளியேற்றும் மதகுகள் அமைந்துள்ளன. இதில், மூன்றாவது மதகில் இருந்து துவங்கும் கால்வாய் கொல்லச்சேரி, மூன்றாம்கட்டளை, இரண்டாம்கட்டளை வழியாக அனாகாபுத்துார் அருகே அடையாற்றில் முடிகிறது.தற்போது, இந்த கால்வாய் செல்லும் பகுதியில் விவசாயம் கைவிடப்பட்டு குடியிருப்புகளாக மாறி வருகின்றன. இந்நிலையில், கொல்லச்சேரி, மூன்றாம்கட்டளை பகுதியில் உள்ள இக்கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு, அதன் பரப்பளவு குறைந்து வருகிறது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:கொல்லச்சேரி ஊராட்சி எல்லையை கடக்கும் கால்வாய் பல இடங்களில் முழுதும் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. இதனால், கடந்த வடகிழக்கு பகுதியில் கொல்லச்சேரி குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்தது. இந்நிலையில், கொல்லச்சேரி ஐந்து கண் பாலம் அருகே, கால்வாயோரம் இருந்த தனியார் நிலம் வழியே வெள்ள நீர் வடிந்து செல்லும். தற்போது இடம் மண் கொட்டி மேடு எழுப்பி வீட்டு மனை பிரிவாக மாற்றப்பட்டுவிட்டது. இதனால், இனி வரும் காலங்களில் மழை நீர் செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கொல்லச்சேரியில் உள்ள இக்கால்வாயை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை