உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  வாலாஜாபாத் சாலையில் மாடுகளால் தொந்தரவு அதிகரிப்பு

 வாலாஜாபாத் சாலையில் மாடுகளால் தொந்தரவு அதிகரிப்பு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் சாலையில், நாளுக்கு நாள், மாடுகள் தொந்தரவு அதிகரிப்பால் வாகன ஓட்டிகள், பயணியர் உள்ளிட்ட பலரும் அவதிப்படுகின்றனர். வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட பலரும் மாடுகளை பராமரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மாடுகளை முறையாக பராமரிக்காததால், தினமும் சாலைகளில் சுற்றித்திரிந்து பல தரப்பினருக்கும் தொந்தரவு ஏற்படுத்துகிறது. கடந்த நாட்களில் இரவு நேரங்களில் மட்டும் சாலைகளில் உலா வந்த மாடுகள், சமீப காலமாக பகல் முழுதும் சுற்றி திரிகின்றன. பிரதான சாலை மற்றும் தெருக்களில் கூட்டமாக படுத்து ஓய்வெடுக்கும் மாடுகளால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே, வாலாஜாபாதில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி