உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பழுதடைந்த தெரு விளக்கு சீரமைக்க வலியுறுத்தல்

பழுதடைந்த தெரு விளக்கு சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பேருந்து நிலையம் நுழைவாயில் பகுதியான காமராஜர் வீதியில் திருமண மண்டபம், வங்கி, தனியார் மருத்துவமனை மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.இதில், மேற்கு பகுதி பேருந்து நிறுத்தம், பயணியர் நிழற்குடையை ஒட்டியுள்ள பகுதியில் எட்டுக்கும் மேற்பட்ட தெரு மின்விளக்குகள் பழுதடைந்து உள்ளன.இதனால், இரவு 10:00 மணிக்கு மேல் அப்பகுதியில் உள்ள கடைகள் மூடப்பட்டபின், அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், தனியாக செல்லும் பெண்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.இருளை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் அரங்கேறும் சூழல் உள்ளது. எனவே, காமராஜர் வீதியில் பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை