உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உயர்கோபுர  மின்விளக்கு சீரமைக்க வலியுறுத்தல்

உயர்கோபுர  மின்விளக்கு சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பேருந்து நிலையம் பின்பக்கம் நுழைவாயில் பகுதியான, நான்கு முனை சாலை சந்திப்பில், மாநகராட்சி சார்பில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், ஒரு வாரமாக உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்துஉள்ளது. இதனால், அப்பகுதியில் போதுமான வெளிச்சம் இல்லாமல் உள்ளது.நான்கு முனை சந்திப்பான அப்பகுதியில், இரவு நேரத்தில் தனியாக செல்லும் பெண்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, பழுடைந்த உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை