| ADDED : மே 26, 2024 01:35 AM
காஞ்சி அத்திவரதர் வைபவம்காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 2019ம் ஆண்டு, ஜூலை 1ம் தேதி கோவில் வளாகத்தில் உள்ள அனந்த சரஸ் தீர்த்தத்தில் இருந்து, அத்தி வரதர் வெளியில் எடுக்கப்பட்டார்.பின் வசந்த மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டு தினசரி பூஜைகள் நடந்தன. நின்ற கோலத்தில் 24 நாட்களும், சயன கோலத்தில் 24 நாட்கள் என, ஆகஸ்ட் 17 வரை இந்த வைபவம் நடந்தது.இதில், 1 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர். இதற்கு முன், 1979ம் ஆண்டு அத்திவரதர் வைபவம் நடந்தது. அடுத்து 40 ஆண்டுகள் கழித்து 2059ம் ஆண்டு அத்திவரதர் வைபவம் நடைபெற உள்ளது.தற்போது அத்திவரதர் சிலை கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் தெப்பகுளத்தில் நீராழி மண்டபத்தின் கீழ் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.