மேலும் செய்திகள்
செடிகளால் குடிநீர் தொட்டி வலுவிழக்கும் அபாயம்
17 hour(s) ago
கிளக்காடி ஏரிக்கால்வாயில் சிறுபாலமின்றி விவசாயிகள் அவதி
17 hour(s) ago
வாலாஜாபாதில், 20,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வாலாஜாபாத் சுற்றி உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தோர், தினசரி வாலாஜாபாத் பேருந்து நிலையம் வருகின்றனர். அங்கிருந்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.இப்பேருந்து நிலையத்தில், பல ஆண்டுகளுக்கு முன் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, பயணியர் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது. அதன்பின் முறையான பராமரிப்பின்றி அத்தொட்டி பழுதடைந்து ஒரு கட்டத்தில் இடிந்தது.அதைத் தொடர்ந்து, இதுவரை குடிநீர் வசதி ஏற்படுத்தாமல் உள்ளது. எனவே, வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் புதியதாக குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- டி.கோடீஸ்வரன், வாலாஜாபாத்.மின்விளக்கு வசதி
ஏற்படுத்தப்படுமா?
காஞ்சிபுரம் மாநகராட்சி, 29வது வார்டு, கே.எம்.அவென்யூ மற்றும் சுற்றியுள்ள பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சின்ன காஞ்சிபுரம் வேகவதி தெருவில் இருந்து இப்பகுதிக்கு செல்லும் சாலையில், மின் கம்பங்கள் இல்லாதததால், விளக்கு வசதி ஏற்படுத்தப்படவில்லை.இதனால், இரவு நேரத்தில் இச்சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இருளை பயன்படுத்தி அப்பகுதியில் உள்ள காலி இடங்களில் சமூக விரோத செயல்கள் அரங்கேறுகின்றன. எனவே, வேகவதி தெருவில் இருந்து, கே.எம்., அவென்யூவிற்கு செல்லும் சாலையில், புதிதாக மின் கம்பங்கள் அமைத்து, தெரு மின் விளக்கு வசதி ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.முத்துகுமார், காஞ்சிபுரம்.சேதமடைந்த சாலையை
சீரமைக்க வேண்டும்
காஞ்சிபுரம் மாநகராட்சி, வைகுண்ட பெருமாள் கோவில் விரிவாக்கம், முதல் தெரு வழியாக வைகுண்ட பெருமாள் கோவில், எல்.ஐ.சி., அலுவலகம், ரயில்வே சாலை, கிழக்கு ராஜ வீதி உள்ளிட்ட பகுதிக்கு சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையின் நுழைவு பகுதியில், சாலை சேதமடைந்து பெயர்ந்த நிலையில் உள்ளது.இதனால், வைகுண்ட பெருமாள் கோவிலில் இருந்து, இத்தெருவிற்கு செல்ல சாலை வளைவில் திரும்பும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சி.மணிகண்டன், காஞ்சிபுரம்.புதர்மண்டிய பொது கழிப்பறை
பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில், 2003ல், வேடபாளையம் கிராமத்தில், திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்த்திடும் பொது கழிப்பறை கட்டப்பட்டது. பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சில மாதங்களிலேயே முறையான பராமரிப்பு இல்லாததால், தற்போது ஆடு, மாடுகள் கட்டப்படும் மாட்டுத்தொழுவமாக மாறியுள்ளது. கழிப்பறை உட்பகுதியில், குழாய் லைன்கள் அனைத்தும் உடைக்கப்பட்டுள்ளன. மின் மோட்டாரும் பழுதடைந்துள்ளது.கழிப்பறை கட்டடத்தை சுற்றிலும் புதர் மண்டியுள்ளதால், அதில் விஷ ஜந்துக்கள் தஞ்சமடைந்துள்ளன. லட்சகணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட கழிப்பறை வீணாகி வருகிறது. கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜி.எஸ்.ஸ்ரீநிவாஸ், உத்திரமேரூர்.
17 hour(s) ago
17 hour(s) ago