உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்தது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்தது

காஞ்சிபுரம் மாவட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகள் சீரமைப்பிற்குப் பின், வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது இருந்த வாக்காளர்களை விட, தற்போது 2 லட்சத்து 3 ஆயிரத்து 368 வாக்காளர்கள் குறைந்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2006ம் ஆண்டு தேர்தலின் போது, 13 ஒன்றியங்கள், 648 ஊராட்சிகள், 24 பேரூராட்சிகள், 10 நகராட்சிகள் இருந்தன. சமீபத்தில், உள்ளாட்சி அமைப்புகள் சீரமைக்கப்பட்டன.வரும் தேர்தலில், 13 ஒன்றியங்கள், 633 ஊராட்சிகள், 18 பேரூராட்சிகள், 8 நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. புனித தோமையார் மலை ஒன்றியத்தில், 10 ஊராட்சிகள், குன்றத்தூர் ஒன்றியத்தில் இரண்டு ஊராட்சிகள், ஐந்து பேரூராட்சிகள், இரண்டு நகராட்சிகள், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் ஒன்றியத்தில் மூன்று ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி, காஞ்சிபுரம் நகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன.கடந்த 2006ம் ஆண்டு, உள்ளாட்சி தேர்தலின் போது, 13 ஒன்றியங்களில், 6 லட்சத்து 29 ஆயிரத்து 604 ஆண்கள், 6 லட்சத்து 35 ஆயிரத்து 747 பெண்கள் என, மொத்தம் 12 லட்சத்து 65 ஆயிரத்து 351 வாக்காளர்கள், 10 நகராட்சிகளில், 3 லட்சத்து 49 ஆயிரத்து 223 ஆண்கள், 3 லட்சத்து 47 ஆயிரத்து 989 பெண்கள், என, மொத்தம் 6 லட்சத்து 97 ஆயிரத்து 212 வாக்காளர்கள், 24 பேரூராட்சிகளில் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 805 ஆண்கள், ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 902 பெண்கள் என, மொத்தம் 3 லட்சத்து 89 ஆயிரத்து 707 வாக்காளர்கள் இருந்தனர்.நடைபெற உள்ள தேர்தலில், ஊராட்சி ஒன்றியங்களில், 5 லட்சத்து 93 ஆயிரத்து 579 ஆண்கள், 5 லட்சத்து 84 ஆயிரத்து 72 பெண்கள், இதரர் 18 பேர் என, மொத்தம் 11 லட்சத்து 77 ஆயிரத்து 669 வாக்காளர்கள், பேரூராட்சியில் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 481 ஆண்கள், ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 689 பெண்கள், இதரர் 17 பேர் என, மொத்தம் 3 லட்சத்து 31 ஆயிரத்து 187 வாக்காளர்கள், நகராட்சியில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 245 ஆண்கள், 3 லட்சத்து 1,799 பெண்கள், இதரர் இருவர் என, மொத்தம் 6 லட்சத்து 4 ஆயிரத்து 46 வாக்காளர்கள் உள்ளனர்.-ம.அறம்வளர்த்தநாதன்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை