உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாசி படர்ந்த காட்டேரி குளம்

பாசி படர்ந்த காட்டேரி குளம்

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வல்லக்கோட்டை அடுத்த மாத்துார் ஊராட்சியில் காட்டேரி குளம் உள்ளது. இந்த குளம், 15 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதி வாசிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்தது.தற்போது, பராமரிப்பின்றி பாசி படிந்த நிலையில் உள்ளது. மேலும், குப்பையால் குளம் மாசடைந்து வருகிறது. தவிர, ஸ்ரீபெரும்துார் - சிங்கபெருமாள் கோவில் சாலையோரத்தில் தடுப்பு இன்றி, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால், உயிரிழப்பு மற்றும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, குளத்தை சீரமைத்து, சுற்றிலும் நடைப்பாதை அமைத்து, பாதுகாப்பிற்கு தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ