| ADDED : நவ 22, 2025 01:09 AM
செவிலிமேடு: காஞ்சிபுரம் வெங்கடாபுரம் பிரதான சாலையோரம் உள்ள சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி, வெங்கடாபுரத்தில் இருந்து செவிலிமேடிற்கு செல்லும் சாலையின் குறுக்கே மழைநீர் செல்லும் சிறுபாலம் உள்ளது. வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் நிறைந்த சாலையோரம் உள்ள சிறு பாலத்திற்கு பக்கவாட்டு தடுப்புச்சுவர் இல்லை. மேலும், தெரு மின்விளக்கும் இல்லாததால், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சா லையோரம் ஒதுங்கும்போது, நிலை தடு மாறி பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வெங்கடாபுரம் பி ரதான சாலையோரம் உள்ள சிறு பாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியு றுத்தி வருகின்றனர்.