உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாகனம் மோதி சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

வாகனம் மோதி சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பொன் னேரிக்கரை ரயில்வே மேம்பால மைய தடுப்பில், வாகனம் மோதியதில் சேதமடைந்த நான்கு மின் கம்பங்களை மாற்றி அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் இருந்து, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி வழியாக சென்னை செல்லும் வாகனங்கள் பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பாலம் வழியாக சென்று வருகின்றன. இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம் தரும் வகையில், மேம்பாலத்தின் மைய தடுப்பில் மின்விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மேம்பாலம் வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், நான்கு மின் கம்பங்கள் சேதமாகியுள்ளன. இதனால், அப்பகுதி இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம் இல்லாமல் உள்ளது. எனவே, பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பால மைய தடுப்பில், வாகனம் மோதியதில் சேதமடைந்த இடங்களில் புதிதாக தெரு மின்விளக்கு கம்பங்களை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை