உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  சாலையோரம் இடையூறு செடிகள் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி

 சாலையோரம் இடையூறு செடிகள் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை சாலையோரம், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் இருந்து சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, சென்னை உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் வாகனங்கள் பொன்னேரிக்கரை சாலை வழியாக சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், சாலையின் இருபுறமும் நாணல், எருக்கம் உள்ளிட்ட பல்வேறு செடிகள், சாலை தடுப்பின் உட்பக்கம் வளர்ந்து இருந்தன. இதனால், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்வோரின் கண்களை செடிகளின் கிளைகள் பதம் பார்க்கின்றன. இதனால்,வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, பொன்னேரிக்கரை சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள செடிகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை