உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழைநீர் வடிகால் பணிௐயை விரைந்து முடிக்க உத்தரவு

மழைநீர் வடிகால் பணிௐயை விரைந்து முடிக்க உத்தரவு

குன்றத்துார் : குன்றத்துார் அருகே, கெருகம்பாக்கம், கொளப்பாக்கம் பகுதியில் ஆண்டுதோறும் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.வெள்ள நீர் விரைவாக வடிந்து செல்ல, கொளப்பாக்கத்தில் 11.72 கோடி ரூபாய் மதிப்பிலும், கெருகம்பாக்கத்தில் 19.16 கோடி ரூபாய் மதிப்பிலும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இந்த பணிகளை, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, நேற்று காலை நேரில் ஆய்வு செய்தார். பணிகளின் விபரங்களை கேட்டறிந்து, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் சந்தீப் சக்சேனா, கூடுதல் தலைமை செயலர் ராதாகிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமை செயலர் பிரதீப் யாதவ், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை