உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பரந்துார் ஏர்போர்ட் நிலம் எடுப்பு: டி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு

பரந்துார் ஏர்போர்ட் நிலம் எடுப்பு: டி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் சுற்றுவட்டார 20 கிராமங்களில், 5,000 ஏக்கர் பரப்பளவில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளது.இதற்கான நிர்வாக அனுமதியை, கடந்தாண்டு அக்டோபர் மாதம் இறுதியில் தமிழக அரசு வெளியிட்டது. இதையடுத்து, நில எடுப்புக்கான பூர்வாங்க பணிகளை, வருவாய்த் துறை மேற்கொண்டு வருகிறது.நில எடுப்புக்கு, மூன்று மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில், 323 பேர் பணியாற்ற உள்ளனர். முதற்கட்டமாக, நில எடுப்பு பணிகளுக்காக, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் என்பவரை, தமிழக அரசு நியமித்துள்ளது.இவர், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் பொறுப்பேற்றுள்ளார். நில எடுப்புக்கான அலுவலகங்கள் அமைப்பது, பணியாளர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகள் அடுத்தகட்டமாக நடைபெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ