உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தனியார் பாதைக்காக குடிநீர் தொட்டியை அகற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க மனு

தனியார் பாதைக்காக குடிநீர் தொட்டியை அகற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க மனு

வாலாஜாபாத்:இளையனார்வேலுாரில் தனியார் நில பாதை வசதிக்காக, பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் இருந்த குடிநீர் தொட்டியை அகற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.வாலாஜாபாத் வட்டாரம், இளையனார்வேலுார் ஊராட்சி உறுப்பினர் சதீஸ்குமார் என்பவர், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.மனு விபரம்:இளையனார்வேலுாரில், 20 பழங்குடியினர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது குடியிருப்பு பகுதியில் சிறு மின்விசை பம்பு அமைத்து, குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்த சிறு மின்விசை பம்புக்கு பின்புறத்தில் தனியார் பண்ணை நிலம் உள்ளது.அந்நிலத்திற்கு சென்றுவர, பாதை வசதி ஏற்படுத்துவற்காக பழங்குடியினர் மக்கள் பயன்பாட்டில் இருந்த குடிநீர் தொட்டி அகற்றப்பட்டது.தனியார் பாதை வசதிக்காக அப்பகுதியில் அரசு புறம்போக்கு நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே, இளையனார்வேலுாரில் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் அகற்றப்பட்ட குடிநீர் தொட்டியை மீண்டும் அமைப்பதோடு, அதற்கு காரணமாக இருந்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி