உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சங்கரா கலை கல்லுாரியில் வேலைவாய்ப்பு பயிற்சி

சங்கரா கலை கல்லுாரியில் வேலைவாய்ப்பு பயிற்சி

ஏனாத்துார்:காஞ்சிபுரம், ஏனாத்துாரில் இயங்கி வரும் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர்களின் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இதில் ஒரு பகுதியாக, ரெடிங்டன் நிறுவனத்துடன் இணைந்து கணினி பட்டய பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது, வேலைவாய்ப்பு மிக்க படிப்புகளான 'டேட்டா சயின்ஸ்' உள்ளிட்ட பயிற்சி வழங்க 'ஆப்டெக்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இதில், 'ஆப்டெக்' நிறுவன காஞ்சிபுரம் மேலாளர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லுாரி வேலை வாய்ப்பு அதிகாரி முனைவர் வினு சக்ரவர்த்தி வரவேற்றார். மேலாண்மை துறை தலைவர் விக்ரமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ