உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விருதசீர நதி சாலை ஓரம் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள்

விருதசீர நதி சாலை ஓரம் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள்

கணபதிபுரம் : காஞ்சிபுரம் தண்டலம் கிராமத்தில் இருந்து, முருங்கை கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை குறுக்கே, விருதசீர நதி கடந்து செல்கிறது. இந்த மண் சாலை வழியாக, புள்ளலுார், தண்டலம், பள்ளம்பாக்கம், கொட்டவாக்கம் ஆகிய கிராமத்தினர் தக்கோலத்திற்கு வாகனங்களில் சென்று வருகின்றனர்.இதுதவிர, முருங்கை கிராமத்தில் இருந்து, பூ, காய்கறி ஆகிய விளைப்பொருட்களை ஏற்றி செல்லும் விவசாயிகள், தண்டலம், பள்ளம்பாக்கம், பரந்துார் கிராமம் வழியாக காஞ்சிபுரத்திற்கு செல்கின்றனர்.விருதசீர நதி குறுக்கே செல்லும் மண் சாலை ஓரம், முருங்கை ஊராட்சி நிர்வாகத்தினர் குப்பை கொட்டி எரிக்கின்றனர். சில நேரங்களில், குப்பை சாலை ஓரம் கொட்டி விட்டு செல்கின்றனர். இந்த குப்பை, வாகன ஓட்டிகளுக்கு முகம் சுளிப்பை ஏற்படுத்துவதோடு, விருதசீர நதிசேருகின்றன.மேய்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் விருதசீர நதி பள்ளங்களில் தேங்கி இருக்கும் தண்ணீரை குடிக்கும் போது, பிளாஸ்டிக் குப்பை, அவற்றின் வயிற்றிற்குள் செல்வதால், இறக்கும் அபாயம் உள்ளது.எனவே, விருதசீர நதி மண் சாலை ஓரம் குப்பை கொட்டுவதை சம்பந்தப்பட்ட துறையினர் தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்