உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணனின் தாய் மறைவு

புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணனின் தாய் மறைவு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பெருநகரில், புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனின் தாய் கிருஷ்ணவேணி, 86, நேற்று முன்தினம் உயிரிழந்தார். புதுச்சேரி பொதுப் பணித் துறை அமைச்சராக இருப்பவர் லட்சுமி நாராயணன், 65. இவர், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். இந்நிலையில், பெருநகரில் வசித்து வந்த அமைச்சரின் தாய் கிருஷ்ணவேணி, 86; உடல்நலக்குறைவினால் உயிரிழந்தார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, நேற்று காலை பெருநகருக்கு வந்து, அமைச்சரின் தாய் கிருஷ்ணவேணிக்கு நேரில் அஞ்சலி செலுத்தி னார். பின், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு, இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார். புதுச்சேரி துணை முதல்வர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமிகாந்தன், பாஸ்கர், ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை