உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பெண்கள் தகராறில் வாலிபர் அடித்துக் கொலை

பெண்கள் தகராறில் வாலிபர் அடித்துக் கொலை

திருப்போரூர்: காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே இரண்டு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு வாலிபர் அடித்துக் கொல்லப்பட்டார், திருப்போரூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் வேதகிரி. இவருடைய மனைவி இந்திராவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த துரைக்க‌ண்ணுவின் மனைவி அம்சாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இது பின்னர் கைகலப்பாக மாறியது. இது குறித்து துரைக்கண்ணுவும் அவருடைய உறவினரும் வேதகிரி வீட்டிற்குச் சென்று விசாரித்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் வேதகிரியின் மகன் வினோத் ( வயது 19)தை துரைக்கண்ணுவும் அவருடைய உறவினர்களும் அடித்ததில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வினோத் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதைத் தொடர்ந்து திருப்போரூர் போலீசார், துரைக்கண்ணுவையும் அவருடைய உறவினரயும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை