உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காலி மனையில் மழைநீர் தேக்கம் கோனேரிகுப்பத்தில் கொசு தொல்லை

காலி மனையில் மழைநீர் தேக்கம் கோனேரிகுப்பத்தில் கொசு தொல்லை

கோனேரிகுப்பம்: கோனேரிகுப்பம் ஊராட்சி, காரப்பேட்டை ராஜேஸ்வரி நகர் பகுதியில் காலிமனையில் தேங்கும் மழைநீரால் கொசுத் தொல்லை அதிகரித்து உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, காரப்பேட்டை ராஜேஸ்வரி நகர் பேஸ் - 3ல், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், காஞ்சிபுரத்தில் சில நாட்களாக பெய்த மழையால் காலிமனையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், மழைநீரில் உலாவும் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் புகுந்து விடுவதாக அப் பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே, ராஜேஸ்வரி நகரில் காலி மனையில், தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தவும், இப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை