உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குடிநீர் குழாய் உடைப்பால் சேதமான சாலை சீரமைப்பு

குடிநீர் குழாய் உடைப்பால் சேதமான சாலை சீரமைப்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் இருந்து, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி வழியாக சென்னை செல்லும் வாகனங்கள் ஜவஹர்லால் நேரு சாலை வழியாக சென்று வருகின்றன.வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த இச்சாலையில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 1 மாதத்திற்கும் மேலாக குடிநீர் வீணாகியது.குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டியதால், குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல், காஞ்சிபுரத்தில் மழை பெய்வதால், குடிநீர் உடைப்பால் சாலை சேதமடைந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கியது. பள்ளம் இருப்பது தெரியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்தில் சிக்கினர். இதையடுத்து, நேற்று காலை, நெடுஞ்சாலைத் துறையினர் சேதமடைந்த சாலையில் தார் ஜல்லி கலவை வாயிலாக சீரமைத்தனர். இருப்பினும், மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்காததால், அப்பகுதியில் மீண்டும் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடையும் சூழல் உள்ளது.எனவே, குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை