உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாத் அவசர சிகிச்சை பிரிவு கட்டட பணிகளை முடிக்க கோரிக்கை

வாலாஜாபாத் அவசர சிகிச்சை பிரிவு கட்டட பணிகளை முடிக்க கோரிக்கை

வாலாஜாபாத்:வாலாஜாபாத் அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு மையத்திற்கான கட்டடப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது. வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள 35 கிராமங்களில் வசிப்போருக்கு அவசர மருத்துவ உதவிக்கு, வாலாஜாபாத் வட்டார அரசு பொது மருத்துவமனை முக்கிய பங்கு வகிக்கிறது. எனினும், இம்மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு போதுமான மருத்துவ வசதி இல்லை. இதனால், விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சைக்கு முதலுதவி அளித்து செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அம்மாதிரியான நேரங்களில் கால விரயம் காரணமாக சில சமயங்களில் உயிரிழப்பு போன்ற சம்பவங்களும் ஏற்படுகிறது. இதனால், வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை சிறப்பு பிரிவு ஏற்படுத்த 4.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பரில் பணிகள் துவங்கியது. இந்நிலையில், பணிகளை விரைந்து முடித்து பருவ மழைகாலத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பல தரப்பினரும் கோரிக்கை வீடுத்துள்ளனர். இதுகுறித்து, வாலாஜாபாத் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயராணி கூறியதாவது: வாலாஜாபாதில் அவசர சிகிச்சை சிறப்பு பிரிவுக்கான இரண்டு அடுக்கு கட்டடப் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தற்போது 70 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. பணிக்கான ஒப்பந்தகாலம் இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில், முன்னதாக பணி முடிந்து பயன்பாட்டிற்கு வரவும் வாய்ப்புள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை