உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் ஓராண்டில் நடந்த சாலை விபத்துகள் 1,031; மாவட்டத்தில் 282 பேர் பலி

காஞ்சியில் ஓராண்டில் நடந்த சாலை விபத்துகள் 1,031; மாவட்டத்தில் 282 பேர் பலி

காஞ்சிபுரம், தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக, ஜனவரியில் கடைபிடிக்கும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த ஓராண்டில் மட்டும், 1,031 விபத்துகளில் 282 பேர் உயிரிழந்தனர். 1,264 பேர் பல்வேறு விபத்துக்களில் காயமடைந்துள்ளது தெரியவந்துள்ளது.தமிழகத்தில் உள்ள கிராம சாலைகள், ஒன்றிய, மாவட்ட, தேசிய நெடுஞ்சாலைகள் போதிய பராமரிப்பு இன்றியும், குண்டும் குழியுமாக இருப்பதால், ஏராளமான விபத்துகள் நடந்தபடியே உள்ளன. இதனால், ஆண், பெண், குழந்தைகள் என பல தரப்பினரும் காயமடைவதோடு இறக்கவும் நேரிடுகிறது.

தொடரும் இறப்பு

இவற்றை குறைக்க, சாலை பாதுகாப்பும், விழிப்புணர்வும் முக்கிய பணியாக பார்க்கப்படுகிறது. ஜனவரி 15 முதல், பிப். 14 வரை சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. சாலை பாதுகாப்பிற்கு, தமிழக அரசு, 2023- - 24ம் ஆண்டில் மட்டும் 135.8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இருப்பினும் சாலை விபத்துக்களும், இறப்பு ஏற்படுவதும் தொடர்ந்தபடியே உள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தில், நெடுஞ்சாலை துறை சாலைகளும், தேசிய நெடுஞ்சாலை சாலைகளும் படுமோசமாக இருப்பதால், அன்றாடம் பல விபத்துக்கள் நடத்தபடியே உள்ளன.காஞ்சிபுரம் மாவட்டடத்தில், 2023ல், ஜனவரி முதல், டிசம்பர் வரையிலான ஒரு ஆண்டில் மட்டும், 1,031 சாலை விபத்துக்கள் நடந்துள்ளதாக போலீசில் பதிவாகியுள்ளது. இதில், 274 விபத்துக்களில் 282 பேர் பலியாகியுள்ளனர்.

எதிர்பார்ப்பு

அதேபோல, 757 விபத்துக்களில், 1,264 பேர் காயமடைந்துள்ளனர். சராசரியாக, ஒரு நாளைக்கு மூன்று விபத்துக்கள் நடப்பதால், அனைத்து தரப்பினரும் பாதிக்கின்றனர். சாலை பாதுகாப்பு சம்பந்தமாக, மாதந்தோறும் மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. இருப்பினும் சாலை பாதுகாப்பில் போதிய நடவடிக்கை இல்லை என்ற குற்றச்சாட்டே உள்ளது.காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் துறை சார்பில், சாலை பாதுகாப்பு சம்பந்தமாக 1,235 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளனர். போலீசார் மட்டுமல்லாமல், வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாவதால், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேலும் அதிகபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.--------------------------

காஞ்சி மாவட்டத்தில் 2023ல் நடந்த குற்றங்கள், நடவடிக்கை விபரம்

கொலை சம்பவம் 34கொலை முயற்சி 18கஞ்சா வழக்குகள் 377கஞ்சாவில் கைதானவர்கள் 451குட்கா வழக்குகள் 986குட்காவில் கைதானவர்கள் 990சைபர் கிரைம் புகார் 1,252முடக்கப்பட்ட தொகை ரூ.15.4 கோடிஒப்படைக்கப்பட்ட தொகை ரூ.46.6 லட்சம்

திருட்டு வழக்குகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில், மதுவிலக்கு, மகளிர் உட்பட 15 காவல் நிலையங்கள் உள்ளன. இதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், இரவு நேரங்களிலோ அல்லது நெடுஞ்சாலையிலோ வழிப்பறி நடப்பதும், வீடு புகுந்து திருடுவது போன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கம்.அந்த வகையில், கடந்த ஒராண்டில், திருட்டு, வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளை என, 156 சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் இதில், 147 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மொத்த வழக்கில் 94 சதவீதம் துப்பு துலங்கியுள்ளது. இந்த வழக்குகளில் 2.05 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடு போன நிலையில், 1.95 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.--------------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ