உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாகன ஓட்டிகளுக்கு டீ வழங்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

வாகன ஓட்டிகளுக்கு டீ வழங்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், 35வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, சுங்கசாவடி வழியாக செல்லும் களைப்படைந்த வாகன ஓட்டுனர்களுக்கு டீ மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் சுங்கசாவடி அருகில், காஞ்சிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், ஸ்ரீபெரும்புதுார் மோட்டார் வாகன ஆய்வாளர் கிருஷ்ணன் ஆகியோர் அவ்வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி ஓட்டுனர்களை ஒருங்கிணைத்தனர்.நெடுந்துார பயணத்தால் ஏற்படும் விபத்து குறித்தும் அதை தடுக்கும் முறை குறித்தும் விளக்கம் அளித்தனர்.அதை தொடர்ந்து அனைத்து ஓட்டுனர்களுக்கும், டீ மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி