உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பள்ளி மேலாண்மை குழு மாநாடு

பள்ளி மேலாண்மை குழு மாநாடு

காஞ்சிபுரம்:குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒவ்வொரு அரசு பள்ளியிலும், பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சியை திட்டமிட்டு நடைமுறைபடுத்த, மேலாண்மை செய்ய பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட, 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 586 பள்ளிகளில் அமைக்கப்பட்டு உள்ளன.இப்பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் மற்றும்தலைமையாசிரியர்களுக்கான மாநாடு, சுங்குவார்சத்திரம் அருகே, தனியார் பள்ளியில், நேற்று நடந்தது.பள்ளி மேலாண்மை குழு அரசாணைகள் பற்றியும், 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு' பற்றி காணொலிகள் காண்பிக்கப்பட்டன.பயிற்சி கலெக்டர் சங்கீதா பங்கேற்று, இந்நிகழ்ச்சியில் பேசினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, பள்ளி மேலாண்மை குழுவினர், மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள்,ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள் என, பலரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை